Saturday, July 2, 2011

பரதா & வரதா !!!!

பரதா : தேகம் சுடும் வெயிலினால், தாகம் எடுக்குதே வரதா ....
வரதா: தண்ணிர் தேடி பார்த்தேன், ஏதும் அகப்படவில்லை பரதா ...
பரதா: மக்கள் இல்லா ஊரில் மாட்டிக்கொண்டோம் வரதா ....
வரதா: மாக்கள் வடிவில் மக்கள் திரிவதை மனதில் கொள்ளடா பரதா ....

சென்னைக்கு வந்த புதிதில் அழுத்துக்கொண்ட பரதனும், வரதனும் வசைப்பாடிய வார்த்தைகள் தான் மேலே உள்ளவை. பரதனும் வரதனும் நீண்ட கால நண்பர்கள், பரதன் கேள்வி கேட்பவன், வரதனோ அதற்க்கேற்ப பதில்களை கொடுப்பவன்.. தமிழில் ஆர்வம் கொண்ட மென்பொருள் பொறியாளர்களில் இவர்களும் ஒருவர். இனி வரும் காலங்களில் சமுதாய நிகழ்வுகளையும், சந்தர்ப்ப சுழ்நிலைகளைக்கொண்டு இவர்கள் உரையாடல்கள் அமையும். (இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்க்காக அல்ல, பண்படுத்துவதற்க்கே !!!)

பரதா: புன்னகை என்றால் என்ன??
வரதா: புன்னகை என்பது இதழ்கள் சிணுங்குவது.
பரதா: அது எப்படி, அதை கண்ணீர் என்றுக்கூட சொல்லலாமே.
வரதா: கண்ணீர் என்பது விழிகள் சிணுங்குவது.

பரதா: புன்னகை, கண்ணீர் இதன் ஒற்றுமையைக்கூறு ..
வரதா: இரண்டும் இயல்பாக இருக்கும், நம்முடைய அன்பை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்.
பரதா: இரண்டுக்கும் உள்ள வேற்றுமை?
வரதா: சிரிப்பின் உச்சம் கண்ணிரைத்தொடும், கண்ணீரின் உச்சம் என்றும் சிரிப்பை சுடும்.
பரதா: இதில் சிறந்தது எது ?
வரதா: அது நீ இதை எங்கு பயன்படுத்துகிறாய் என்பதை பொறுத்தது.
பரதா: இதில் கெட்டது எது?? யாருக்கு ??
வரதா: பெண்களின் பொய் கண்ணீர் கெட்டது ஆண்களுக்கு, ஆண்களின் பொய் சிரிப்பு கெட்டது பெண்களுக்கு.
பரதா: இதில் எது அன்பை வளர்க்கும்? காரணம்?
வரதா: கண்ணீர் தான். முதல் முறையாக ஒருவரை பார்த்தால்க்கூட உன்னால் புன்னகை தரமுடியம், ஆனால் உன் உள்ளம் தொட்ட யாரேனுக்காக மட்டுமே என்றும் உன்னால் கண்ணீர் சிந்த முடியும்.
பரதா இதில் எது எளிதாக பகையை வளர்க்கும் ? ஏன்?
வரதா: சிரிப்பு தான். ஒரு பத்து பேருக்கு நடுவில் நீ தேவை இல்லாமல் சிரித்துக்கொண்டே இருந்துப்பார், உனக்கே புரியும்.
பரதா: இதில் எது தேவையானது, எத தேவையில்லாதது ??
வரதா: இரண்டும், தேவையுடன் செய்தால் தேவையானது. தேவையில்லாமல் செய்தால் தேவையில்லாததே !!!
பரதா: சிரிப்பில் சிறந்தவர்கள் பெண்களா ?? ஆண்களா ??
வரதா:சிரிப்பில் சிறந்தவர்கள் பெண்களே, அவர்களை சிரிக்கவைப்பதில் சிறந்தவர்கள் ஆண்களே.
பரதா: கண்ணீரில் சிறந்தவர்கள்??
வரதா: இதில் சிறந்தவர்களும் பெண்கள்தான், ஆனால் இதில் திறமை என்னவென்றால் அது இவர்கள் கண்ணீர் சிந்துவதா, இல்லை பிறரை கண்ணீர் சிந்தவைப்பதா, என்பதிந்தான் உள்ளது.
பரதா: அப்ப ஆண்கள் எதில்தான் சிறந்தவர்கள் ?
வரதா: பெண்களை நம்புவதில் அல்லது அவர்களை நம்பவைப்பதில்.
பரதா: உன் உள் அர்த்தம் புரிகிறது ... ;)
வரதா: தவறாக சிந்திக்காதே, என் சொல் அர்த்தம் உனக்கு புரிந்தால் போதும். :)


-- கண்ணன்.ச
நீங்கள் மேற்க்கண்ட இருவரும் என் கற்பனை சகாக்கள், இந்த முயற்சி யாருடைய மனதையும் புண்படுத்துவதற்க்காக அல்ல, உங்கள் நேரத்தை நல்முறையில் பண்படுத்துவதற்க்கும், பயன்படுத்துவதற்க்குமே!!!
குறைகள் இருந்தால் வருந்துகிறேன், நிறைகள் இருந்தால், இன்னும் என்னை வளர்த்துக்கொள்கிறேன் !!!!

Monday, December 28, 2009

போர் நிறுத்தம் ! ! !

உனக்கும் எனக்கும் உலகம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் உதயம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் வான்ம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் இனங்கள் மட்டும் வேறே!

விதைகள் கொண்ட மரங்கள், விழிகள் அறியுமோ ?
விதிகள் போடும் தடங்கள், விந்தையில் முடியுமோ ?
இனி ஓர் உலகம் செய்ய நம்மால் இயலுமோ ?
இருப்பதை காத்து நடந்தால், இன்பம் தொடருமோ ... !

மடிந்த பூக்கள் மாலை ஆகிறதே ...
இறந்த மனிதனின் மார்பில் சாய்கிறதே ...
மண்ணுக்குள் போகும் முன்னே , மனிதனை நேசிக்க கல் ...
மண்ணுக்குள் போன பின்னே, உன் ஆசையை பூசித்துக்கொள் ...

மொழிகள் உண்டு நூறு , கற்றுக்கொள்ளவே !
மதங்கள் உண்டு கோடி, மாறிக்கொள்ளவே !
தெருவுக்கொரு தெய்வம் உண்டு, வேண்டிக்கொள்ளவே !
உயிர் ஒன்று மட்டும் தானே உண்டு, நீவாழ்ந்துக்காட்டவே !

உனக்கும் வேண்டும் போர்நிறுத்தம்,
எனக்கும் வேண்டும் போர்ந்றுத்த்ம்,
இருவருக்குமின்றி மன வருத்தம்,
மதிக்கொண்டு செய்வோம் விதித்திருத்தம் ..

-- கண்ணன்.ச

தந்தையாக நான் !!! (யாவும்கற்பனையே)

காதல் என்னும் வினாக்களுக்கு
காதலி என்னும் விடைத்தாளில்
கவிதையாய் வடித்த விடைக்கு
நான் பெற்ற மதி(ப்)பெண் நீ ......!

தொட்டிலில் நீ, கட்டிலில் உன் தாய்,
இருவரும் எனக்கு ஒன்றுதான்,
பூமிக்கு சந்திரன் சூரியன் போல..

உன் முகப்பு பகுதி என் போல,
மற்ற தொகுதிகள் உன் தாய் போல..
என் தாய்க்கு அடுத்து நான் தீண்டியதோ
உன் தாயை,
அதற்க்கடுத்து சீண்டுவதோ
என் சேயை.

மடியில் நீயும் மாணிக்கமாய்,
மலரில் ஊறும் தேன் சொர்க்கமாய்,
சிரித்தாய் இதழ் விலக,
சிலிர்த்தேன் உடல் உருக..!

உன்னிடம் எனக்கு ஓர் வேண்டுகோள்,
என்றும் உடலை கவனித்துக்கொள்,
ஏனெனில்,
இறுதிவரை உன்னுடன் வரப்போகும்சொந்தம் உன் உடல் மட்டுமே !

உன் தாயை காதலித்தேன்
நீ கிடைத்தாய்....
உன்னை காதலிக்கிறேன்
எனக்கு தாயாக கிடைப்பாயா?

-- கண்ணன்.ச